Sunday 28 June 2015

இது புதுசு !



இப்பல்லாம்  போன் வாங்கி  வாங்கியே  ஓஞ்சு போய்டுவாங்க போலருக்கு !

இருந்தாலும் நம்ம வேல  நாலு பேர உசிப்பெதுறது தான  ! 

HTC  one E9 +   னு  ஒரு மாடல்  சும்மா கலக்கலா இருக்கு  நானும் வாங்கலாமுனு இருக்கேன் !

செம  கான்பிகிரஷன்  பா  கீழ உள்ள லிங்க் ல போய் பாருங்க  ஓகே ! 

நல்லா கேளப்புறாங்கப்பா பீதிய !!




இந்த whatsapp வந்தாலும் வந்துச்சு  போரளிய  கெளப்புரதுக்குனே  ஒரு குரூப் அலைரானுக  !   samsung  மொபைல்ல  ஒரு சிப் இருக்குதாம் அது நம்மோட போட்டோ வீடியோ எல்லாம் களவாண்டு samsung கம்பனிக்கு அனுப்பிடுமாம் ஒரே வீடியோ வா அனுப்பி தொல்லை கொடுக்குராங்கப்பா !  

அவங்ககிட்ட ரெண்டு  கேள்வி
1.  உங்க விஷயங்கள   திருட அவன் ஏன் பட்டரிகுள்ள சிப் வக்கணும்  போன் உள்ள வக்க கூடாதா  ? போன் உள்ள சிப் வச்சா உங்களுக்கு தெரியாமலே உங்கள வாட்ச் பண்ணல்மில்ல ? எல்லாரையும் உங்கள போலவே நெனைக்க படாது ! ஓகே வா !
2.  உங்க விஷயங்களை திருடி அவன் என்ன செய்ய போறான்  !  நீங்க என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா  !?  ஆல் ரெடி உங்கள கூகிள் காரன் வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கான் அது தெரியாம சும்மா பாட்டரி சிப்புன்னு ! சும்மா வேற வேல இருந்தா பாருங்க பாஸ் !


அப்ரம்  ஒரு முக்கியமான விசயம்  அந்த சிப் பாட்டரி யோட சூடு எவ்வளவு இருக்குன்னு கவனிச்சு அதுக்கு ஏத்த மாதிரி போனை கட்டுப்படுத்தும் ஒரு சென்சார் அப்டின்னு சாம்சுங் சொல்லுது.  இதுக்கு மேலயும் அத உருவி வெளியே போட்டிங்கன்னா போன் சூட்டுல வெடிக்க போறது கன்பார்ம்.